கோடைகால பயிற்சி முகாம்


கோடைகால பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

தமிழக அரசின் கலை பண்பாட்டுதுறை, ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச கோடைகால கலைபயிற்சி முகாம் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ராமநாதபுரம் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் நடைபெறுகிறது.

பரதம், பாட்டு, ஓவியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைப்பயிற்சிகள் தொடங்கியது. பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும், உடல் மற்றும் மனவலிமை பெற்றிடவும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு கலை பண்பாட்டுதுறை மண்டல உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆயிர வைசிய மகாசபை கல்விக்குழு தலைவர் விஜயகுமார், சதீஷ்குமார், பள்ளி தாளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.

பரத ஆசிரியர் பாலாஜி, குரலிசை ஆசிரியை முனீஸ்வரி, ஓவிய ஆசிரியை அனந்தமுத்துமாரி, சிலம்ப ஆசிரியர் தனசேகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் செய்திருந்தார்.


Related Tags :
Next Story