பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
சேலம்
பனமரத்துப்பட்டி
ஆட்டையாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கு நிலத்தகராறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனு அளித்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் நடந்தது. சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி தலைமை தாங்கி, மனுக்களை விசாரித்தார். முடிவில் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. முகாமில் சேலம் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சண்முகம், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story