ராட்டை சுற்றி பாளையத்தில்தென்னக காசி பைரவர் கோவில் கும்பாபிஷேக விழாமார்ச் 13-ந் தேதி நடக்கிறது


ராட்டை சுற்றி பாளையத்தில்தென்னக காசி பைரவர் கோவில் கும்பாபிஷேக விழாமார்ச் 13-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 24 Jan 2023 1:00 AM IST (Updated: 24 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கும்பாபிஷேக விழா

ஈரோடு

ராட்டை சுற்றிபாளையம் தென்னக காசி பைரவர் கோவில் கும்பாபிஷேக விழா மார்ச் 13-ந் தேதி நடக்கிறது.

பைரவர் கோவில்

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றி பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா மார்ச் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பந்தல் காலுக்கான பாலக்கால் போடும் விழா நடந்தது. விழாவில் பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

பக்தர்கள்

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அ.கணேசமூர்த்தி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, பாலகிருஷ்ணன், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சு.குணசேகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கதிர்வேல், பா.ஜனதா கட்சி கலைச்செல்வன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலக்கால் நடும் பணியை தொடர்ந்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


Next Story