வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம்
x

காட்பாடி தாலுகாவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நடைபெற்றது.

வேலூர்

காட்பாடி தாலுகாவில் உள்ள 41 ஊராட்சிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஜெயந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

முகாம்களில் பொதுமக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் அட்டையையும் கொண்டுவந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டனர்.

முகாம்களில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story