அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் பிரசாரம்


அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் பிரசாரம்
x

அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், கோலியனூர் ஆகிய இடங்களில் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருபாகரன், செயலாளர் தேசிங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், தலைவர் சரவணன், பொருளாளர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் வீமன், துரை, காசி, மோகனா, புனிதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜானகிதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story