ஆதித்தனார் கல்லூரியில் வளாகத்தேர்வு


ஆதித்தனார் கல்லூரியில் வளாகத்தேர்வு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். டைசின் கம்பியூட்டிங் நிறுவன பணியிடங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்தனர்.

வளாகத்தேர்வில் தேர்ச்சி பெற்ற கணிப்பொறியியல் துறை மாணவர்கள் ஞானமூர்த்தி பரமேஸ்வர், பால சதீஷ், கங்காதரன், கார்த்திக் சிவராம், விமல், ஈஸ்வர், கணிதத்துறை மாணவர்கள் மகாராஜா, பேச்சிமுத்து ஆகியோருக்கு டைசின் கம்பியூட்டிங் நிறுவன தலைமை முதன்மை அதிகாரியும், நிறுவனருமான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் டேவிட் போன்வி பணிநியமன ஆணைகளை வழங்கினார். தேர்வான மாணவர்களை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


Next Story