ஜி.பி.பார்மசி கல்லூரியில் வளாக நேர்காணல்


ஜி.பி.பார்மசி கல்லூரியில் வளாக நேர்காணல்
x

ஜி.பி.பார்மசி கல்லூரியில் வளாக நேர்காணல் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மண்டலவாடியில் உள்ள ஜி.பி.பார்மசி கல்லூரியில் வளாக நேர்காணல் நடந்தது. சென்னையில் உள்ள தனியார் நிறுவன மனிதவள சீனியர் மேலாளர் வெங்கட்ரெட்டி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணலை நடத்தினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான மாணவர்களை கல்லூரி தாளாளர் ஜி.பொன்னுசாமி பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் தீன்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story