கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை


கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை
x

கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே வேப்பங்கனிபட்டியை சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி அஞ்சுகம். இவர்களது மகள் பவானி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப விரவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் அஞ்சுகம் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story