மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி

மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணி தேர்வுகள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-4-2023 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்- பி மற்றும் குரூப்- சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.

இத்தேர்வில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்த பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

பயிற்சி வகுப்புகள்

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் TN Career Services Employment மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் AIM TN என்ற யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(https://tamilnaducareerservices.tn.gov.in/) எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story