சேதமடைந்த குளத்தின் படித்துறை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த குளத்தின் படித்துறை சீரமைக்கப்படுமா?
x

மூலங்குடியில் சேதமடைந்த குளத்தின் படித்துறை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

மூலங்குடியில் சேதமடைந்த குளத்தின் படித்துறை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த படித்துறை

கூத்தாநல்லூர் அருகே மூலங்குடியில் உள்ளது பெருமாள் குளம். இந்த குளத்தின் கரையோரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக படித்துரை கட்டப்பட்டது. இந்த குளத்தில் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் மூலங்குடி, வெங்காரம்பேரையூர், கமலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தில் உள்ள படித்துறை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் படிக்கட்டுகள் மற்றும் தடுப்பு சுவர் இடிந்துள்ளது. இதனால் இந்த படித்துறை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மது அருந்துகின்றனர்

சிறுவர்கள், வயதானவர்கள் சேதமடைந்த படிக்கட்டுகளில் இறங்கும் போது வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். இந்த படித்துறையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்த பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் அல்லது அதனை அகற்றி விட்டு புதிதாக படித்துறை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story