சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடிகள் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடிகள் சீரமைக்கப்படுமா?
x

கடமலைக்குண்டுவில் சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடிகளை சீரமைக்க வேண்டும்.

தேனி

கடமலைக்குண்டுவில் இருந்து தேனி சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதி வரையிலான 8 கிலோ மீட்டர் சாலையில் ஒருபக்கம் ஆறும், மறுபக்கம் மலையும் உள்ளது. மலைப்பாதை போன்று அமைந்துள்ள இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்துகளை தடுக்கும் வகையில் ஆங்காங்கே குவிலென்ஸ் கண்ணாடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நாளடைவில் அவை சேதமடைந்தன. குறிப்பாக குவிலென்ஸ் கண்ணாடிகள் உடைந்துவிட்டன. இதுதவிர சாலையில் பல்வேறு இடங்களில் தடுப்பு கம்பிகள் இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து வருகின்றனர். அதேபோல் வாகனங்களும் பள்ளத்தில் பாயும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. எனவே கடமலைக்குண்டு-அண்ணாநகர் சாலையில் சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடிகளை சீரமைப்பதுடன், தடுப்பு கம்பிகள் அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Related Tags :
Next Story