சிறுமி கடத்தலா?
செம்பனார்கோவில் அருகே சிறுமி கடத்தலா?
செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்தநிலையில் அந்த சிறுமி மறு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் பெற்று அனுப்பிவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. உடனே சிறுமியின் பெற்றோர், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். ஆனால் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் மகளிர் போலீசார் மாணவி காணவில்லை என வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.