கணவரை விவாகரத்து செய்ய முடிவா? நடிகை சிவரஞ்சனி விளக்கம்


கணவரை விவாகரத்து செய்ய முடிவா? நடிகை சிவரஞ்சனி விளக்கம்
x
தினத்தந்தி 24 Nov 2022 3:25 AM GMT (Updated: 2022-11-24T11:17:38+05:30)

நடிகை சிவரஞ்சனி கணவரை விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்திருப்பதாக தெலுங்கு யூடியூப் சேனல்களில் தகவல்கள் வெளியானது. இதற்கு பதில் அளித்து சிவரஞ்சனி கூறியதாவது:-

தமிழில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சிவரஞ்சனி. தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன் விலங்கு, கலைஞன், தாலாட்டு, ராஜதுரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் தற்போது விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்திருப்பதாக தெலுங்கு யூடியூப் சேனல்களில் தகவல்கள் வெளியானது.

இதற்கு பதில் அளித்து சிவரஞ்சனி கூறும்போது, ''எனது கணவர் ஸ்ரீகாந்தும், நானும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறோம். இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ளப்போவதாக வெளியான தகவல் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தினமும் எங்களை தொலைபேசியில் பலர் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார்கள். சமூக வலைதளத்தில் வரும் எங்களின் விவாகரத்து செய்தி முழுக்க பொய்" என்றார்.

நடிகர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ''என் மனைவி மற்றும் குடும்பத்தின் மீது நான் உயிராக இருக்கிறேன். எனவே தயவு செய்து விவாகரத்து வதந்தியை பரப்ப வேண்டாம்" என்றார்.


Next Story