ஆகாய தாமரைகளால் சூழப்பட்ட வாய்க்கால்


ஆகாய தாமரைகளால் சூழப்பட்ட வாய்க்கால்
x

ஆகாய தாமரைகளால் சூழப்பட்ட திருநகரி வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் திருநகரி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பேரூராட்சியின் முக்கிய வடிகாலாக உள்ளது. மேலும் வைத்தீஸ்வரன் கோவில், கரைமேடு, எடகுடி வடபாதி, செக்கிருப்பு, காளிகாவலபுரம் போன்ற கிராமத்தில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆக்கிரமிப்பு

இந்த வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், மழைக்காலங்களில் உடைப்பு ஏற்படுவதாலும் விளக்குமுகதெரு, தெற்குவெளி, கலைஞர் காலனி, ரயில்வே ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால், மேற்கண்ட பகுதி மக்கள் ஆண்டுதோறும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தூர்வாரப்படுமா?

மேலும், இந்த வாய்க்காலில் ஆகாயத் தாமரைகள் அதிகளவு வளர்ந்து குளமே ெதரியாத அளவுக்கு நீண்டதூரம் படர்ந்துள்ளது. இதனால், விவசாய பணிகளுக்கு சீராக தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நகரி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றி குளத்தை தூர்வாருவதுடன் அதன் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்


Next Story