புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
கந்திலியில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
தனியார் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஜோதி பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்று புற்றுநோய் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விளக்கினர். ஊர்வலத்தில் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு கல்லுரி மாணவர்கள் துண்டு பிரசவங்களை வழங்கினார்கள் ஊர்வலத்தில் மாணவர்களுடன் விழிப்புணர்வு வாசகங்களுடைய பதாகைகளைக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
Related Tags :
Next Story