Normal
குத்துவிளக்கு பூஜை
குத்துவிளக்கு பூஜை நடந்தது.
திருச்சி
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூரில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுமங்கலிப் பெண்கள் உள்ளிட்டோர் நேற்று மாலை கோவிலின் முன்பு நீண்ட வரிசையில் அமர்ந்து வாழையிலை மேல் வெற்றிலைப்பாக்கு, பழம், அவல்பொரி, கல்கண்டு முதலான நிவேதனப் பொருட்களுடன் உதிரிப்பூக்களின் நடுவே குத்துவிளக்கேற்றி பூஜை செய்தனர். கணபதி வாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பட்டு, தீபமேற்றி, ஆவாஹனம் செய்யப்பட்டு, தேவி வழிபாடுடன், திருவிளக்கு அகவல் பாராயணம் செய்த பின் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. நைவேத்யம் செய்த பின் தீபாராதனையுடன் வழிபாடு நிறைவு பெற்றது.
Related Tags :
Next Story