தக்காளி விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை - ஜெயக்குமார் விமர்சனம்
விலைவாசி உயர்வால் எங்கள் வீட்டில் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை,
சென்னையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தக்காளி சாதம் சாப்பிடமுடியவில்லை என தக்காளி விலை உயர்வு குறித்தும் ஆளும் கட்சியை விமர்சித்தும் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், நாளை சென்னையில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தபட உள்ளது. மேலும், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு குறித்த முக்கிய ஆலோசனை இன்று நடத்தப்படுகிறது என்றார்.
மேலும் ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், என்டிஏ கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அனைவருக்கும் தெரியும் என்றும் என்டிஏ கூட்டத்தில் 38 கட்சிகள், ஆனால் எதிர்கட்சி கூட்டத்தில் 26 கட்சிகள் தான் பங்கேற்றன என தெரிவித்தார்.
செந்தில்பாலாஜி குறித்து கருத்து தெரிவித்த அவர், சிறைவாசியாக இருக்கும் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது வீண் செலவு தான் என்றார். தொடர்ந்து, முதல்-அமைச்சருக்கு மேகதாது அணைபற்றி கவலையில்லை, மக்களைப்பற்றியும் கவலையில்லை என்று குற்றம்சாட்டினார்.