அரிய வகை முள்ளெலி


அரிய வகை முள்ளெலி
x

அரிய வகை முள்ளெலி

பல்லடம்

பல்லடம் பச்சாபாளையம் கருப்பராயன் கோவில் வீதியில் சிறுமிகள் கார்த்திகா, அபிநயா ஆகியோர் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீர் கால்வாய்க்குள் பந்து விழுந்துவிட்டது. அதனை எடுக்க கார்த்திகா சென்றபோது அங்கு முள் எலி இருந்துள்ளது. இதுகுறித்து சிறுமி அவரது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற அவர் கால்வாய்க்குள் இருந்து முள் எலியை வெளியே எடுத்தார்.

இது குறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவுறுத்தலின்படி சம்பவ இடத்திற்கு வந்த வனவர் மணிகண்டன் அந்த ஆண் முள் எலியை எடுத்துக்கொண்டு காப்பு காட்டில் கொண்டு விட சென்றார். காயம்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முள் எலியை மீட்க உதவிய சிறுமிகளை அங்கிருந்தவர்கள் பாரட்டினர்.

---

செய்திக்குள் படம் 1 காலம்


Next Story