பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன
மயிலாடுதுறை
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈசானிய தெரு, தென்பாதி, இரணியன் நகர், தாடாளன் கோவில், திட்டை ரோடு, ஊழியக்காரன் தோப்பு, கீழ தென்பாதி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட கற்பக நகர், தட்சிணாமூர்த்தி நகர், சின்னதம்பி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தன. பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரனிடம் புகார் அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இரணியன் நகர், எம். எஸ்.கே. நகர், ஊழியக்காரன் தோப்பு, கிருஷ்ணமூர்த்தி நகர், கற்பகம் நகர் உள்ளிட்ட இடங்களில் முதல் கட்டமாக நகராட்சி சார்பில் ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தனியார் பன்றி பிடிப்போர் ஒருங்கிணைந்து சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றினர். இதற்கு பன்றியின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story