ஊருக்குள் வராத அரசு பஸ் சிறைபிடிப்பு
ஊருக்குள் வராத அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நாங்குநேரி:
நாங்குநேரியை அடுத்துள்ள ஆனிகுளத்தைச் சேர்ந்தவர் சந்தனபிரகாஷ் (வயது 45). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று விட்டு நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் நாங்குநேரி செல்வதற்காக ஏறியுள்ளார். நாங்குநேரி அருகே பஸ் வந்ததும் பைபாஸில் இறங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்தனபிரகாஷ் தனது நண்பர்களுக்கு செல் போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டு அந்த பஸ்ஸை சிறை பிடித்து வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு சட்டப்படி பஸ்கள் இயக்க வேண்டும் என்று கூறியும், பொதுமக்களை சமாதானம் செய்தும் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story