ராசிபுரம் தாசில்தார் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்


ராசிபுரம் தாசில்தார் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்
x

ராசிபுரம் தாசில்தார் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் தாசில்தாராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். இவர் நேற்று காலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு ராசிபுரம் வந்தார். பின்னர் அவர் தனது மகனுடன் ராசிபுரத்தில் இருந்து அவருக்கு சொந்தமான காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.கே.சமுத்திரம் பகுதியில் சென்றபோது கார் வயர் உருகி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உடனடியாக துரிதமாக செயல்பட்டு காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு 2 பேரும் இறங்கி விட்டனர். இதையடுத்து கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தார் கார் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story