சாலை தடுப்பில் கார் ேமாதி விபத்து
சாலை தடுப்பில் கார் ேமாதி விபத்து
திருப்பூர்
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் என்ற இடத்தில் காங்கயத்திலிருந்து லாரி ஒன்று வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதற்கு பின்னால் காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி கார் ஒன்று ஓலப்பாளையம் அருகே வரும்போது திடீரென லாரியின் ஓட்டுனர் லாரியை பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பின்னால் வந்த கார் லாரியில் மோதாமல் இருக்க காரை ஓட்டி வந்தவர் காரை வலது புறம் திருப்பும் போது சாலையின் நடுவே இருந்த இரும்பு தடுப்பின் மீது மோதி காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
Related Tags :
Next Story