கார்-ஆட்டோ நேருக்குநேர் மோதல்; 8 பேர் காயம்


கார்-ஆட்டோ நேருக்குநேர் மோதல்; 8 பேர் காயம்
x

வத்தலக்குண்டு அருகே கார், ஆட்டோ மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே உள்ள மாலையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 52). கார் டிரைவர். நேற்று முன்தினம் இவர், கொடைரோட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு கொடைக்கானலுக்கு சென்றார். அங்கு அவர்களை இறக்கி விட்டு, கொடைரோடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் மஞ்சளாறு பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, பழைய வத்தலக்குண்டு நோக்கி ஆட்டோ ஒன்று சென்றது. கண்இமைக்கும் நேரத்தில் காரும், ஆட்டோவும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கப்பாண்டி (27) மற்றும் ஆட்டோவில் பயணித்த பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த லாவண்யா (23), காமுத்தாய் (35), நாகராஜ் (47), முத்துலட்சுமி (20), கண்ணன் (18), விஜயகுமார் (55), அய்யப்பன் (31) ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர்.

இவர்களுக்கு திண்டுக்கல், தேனி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த விபத்தில் கார் டிரைவர் பெருமாள் காயமின்றி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story