கார்-ஆட்டோ மோதல்; பெண் பலி


கார்-ஆட்டோ மோதல்; பெண் பலி
x

பூதப்பாண்டி அருகே கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

துக்கம் விசாரிக்க சென்றனர்

ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சரஸ்வதி (வயது66). இவரும், இவரது உறவினர்கள் வேலப்பன், லேகா ஆகியோரும் பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர், வீரவநல்லூர் பகுதியில் இறந்த வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் துக்கம் விசாரிக்க ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை முருகன் (52) ஓட்டி சென்றார். பின்னர் மாலையில் மீண்டும் அதே ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆட்டோ நடுவூர் பகுதியில் வந்த போது எதிரே ஒரு கார் வந்தது. எதிர்பாராத விதமாக காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ சாலையோரம் உள்ள சிறிய பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த சரஸ்வதி, வேலப்பன், லேகா மற்றும் ஆட்ேடா டிரைவர் முருகன் ஆகிேயார் படுகாயமடைந்தனர்.

பரிதாப பலி

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். இதற்கிடையே கார் டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார்.

ெதாடர்ந்து காயமடைந்த 4 பேரையும் பொதுமக்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகிறார்கள். கார், ஆட்டோ மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியது.


Next Story