சத்தி அருகே கார்-ஆட்டோ மோதல்; 4 மாணவிகள் படுகாயம்
சத்தி அருகே கார்-ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனா்.
ஈரோடு
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரங்கசமுத்திரம் பகுதியில் இருந்து பள்ளிக்கூட மாணவிகளை ஏற்றிக்கொண்டு் ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை ஹயாத் என்பவர் ஓட்டினார். ராஜா வீதியில் சென்றபோது ஆட்டோவின் பின்னால் அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்ேடாவின் பின்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது.
இதில் ஆட்டோவில் இருந்த 4 மாணவிகள் படுகாயம் அடைந்தார்கள். இதில் 3 மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். ஒரு மாணவி மட்டும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story