கார்- ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு
நெல்லை டவுனில் கார்- ஆட்டோ கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்தனர்.
திருநெல்வேலி
நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவருடைய மகன் மனோன்மணி. அதே பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர்களின் கார்களை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் மனோன்மணி, பாலாஜி ஆகியோரின் கார் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டோவின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். நேற்று காலையில் வெளியே வந்து பார்த்த மனோன்மணி உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story