புதுக்கோட்டை அருகே கார்-சரக்கு வேன் மோதல்


புதுக்கோட்டை அருகே கார்-சரக்கு வேன் மோதல்
x

புதுக்கோட்டை அருகே கார்-சரக்கு வேன் மோதியது. இதையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே சின்னையா சத்திரத்தில் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காரும், சரக்கு வேனும் மோதிக்கொண்டது. இதில் சரக்கு வேனில் வந்த ஒருவரும், காரில் வந்த கலியமூர்த்தி என்பவரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கா், உடனடியாக காரை நிறுத்தி, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனது கார் மற்றும் உடன் வந்த காரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காரில் வந்த கலியமூர்த்தி தி.மு.க. நிர்வாகி ஆவார். மாற்றுக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முன்னாள் அமைச்சரின் செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

இந்த விபத்து தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story