கார் மோதி வாலிபர் பலி
கார் மோதி வாலிபர் பலி
திருமங்கலம்
திருமங்கலம் சேடபட்டி அருகே உள்ள ஜம்பலபுரத்தை சேர்ந்த மகேந்திரன் மகன் பசும்பொன் (வயது 25). இவர் மைக் செட் அமைப்பாளர். நேற்று கள்ளிக்குடி அருகே லாடபுரம் கிராமம் மற்றும் திருமங்கலம் காமராஜபுரம் பகுதியில் கோவில் திருவிழாவிற்காக மைக்செட் போட்டுள்ளார். நேற்று மாலை பசும்பொன், அவரது நண்பர் வண்டபுளியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(22) இருவரும் திருமங்கலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தனர். வண்டியை கோபாலகிருஷ்ணன் ஓட்ட பசும்பொன் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். திருமங்கலம்-மதுரை நான்கு வழிச்சாலையில் குதிரைசாரி குளம் விலக்குப் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பசும்பொன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். காயமடைந்த கோபாலகிருஷ்ணன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருமங்கலம் ேபாலீசார் வழக்குப்பதிவு ெசய்து, கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் சிவஞானத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.