மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தம்பதி-குழந்தை படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தம்பதி-குழந்தை படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி-குழந்தை படுகாயமடைந்தனர்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது 27). இவர், தனது மனைவி ஆனந்தி(25), மகள் லிஷனாஸ்ரீ(2) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து மீன்சுருட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மீன்சுருட்டியில் உள்ள ஒரு வங்கி எதிரே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் ஆனந்தி, ரஞ்சித்குமார், லிஷனாஸ்ரீ ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ ஆதங்குடி கிராமத்தை சேர்ந்த உதயகுமார்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story