பஸ் மீது கார் மோதல்; 5 பேர் படுகாயம்


பஸ் மீது கார் மோதல்; 5 பேர் படுகாயம்
x

செங்கோட்டை அருகே பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பஸ் ஒன்று மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. தமிழக-கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டையை அடுத்த ஆரியங்காவு வாகன சோதனைசாவடி அருகே சென்றபோது எதிரே வந்த சொகுசு கார், பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் முழுவதுமாக சேதம் அடைந்து அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தென்மலை போலீசார் விரைந்து வந்தனர். காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு புனலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காயம் அடைந்த 5 பேரும் கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள காஞ்சிரம்பள்ளி இடத்தைச்சேர்ந்தவர்கள் என்பதும், கார் தமிழக பதிவெண் கொண்டதும் தெரியவந்தது. அவர்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவத்தால் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சீர்செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story