பஸ் மீது கார் மோதல்; தொழிலாளி பலி


பஸ் மீது கார் மோதல்; தொழிலாளி பலி
x

நாங்குநேரி அருகே பஸ் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

திசையன்விளையில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. பரப்பாடி - நாங்குநேரி இடையே ஏமன்குளம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது.

இதில் காரில் இருந்த உவரி அருகே உள்ள குட்டத்தை சேர்ந்த தொழிலாளி ஆனந்தகுமார் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் பாலசுப்பிரமணியம் (50) பலத்த காயமடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கார் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த டிரைவரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story