மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் காயம்
கொரடாச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் சிறுவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் சிறுவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
2 பேர் காயம்
குடவாசல் தாலுகா வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 19). சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான 18 வயது சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் கோட்டகம் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் ஹரிஹரன் மற்றும் அவரது நண்பரான சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த தஞ்சாவூரை சேர்ந்த புருஷோத்தமன் (35) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மோதியது
கொரடாச்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல முகந்தனூரை சேர்ந்தவர் தியாகராஜன் (48). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது சைக்கிளில் முகந்தனூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் தியாகராஜன் மீது மோதியது. இதில் காயமடைந்த திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் பஸ்சை ஓட்டி வந்த குடவாசலை சேர்ந்த ராமமூர்த்தி (47) என்பவர் மீது கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.