மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; விவசாயி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; விவசாயி படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

கரூர்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் மேதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55), விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் மண்மங்கலத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் கரூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு தார் சாலையில் விழுந்தார்.

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். காரை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓசூரை சேர்ந்த டிரைவர் தங்கராஜ் மீது வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story