கார் மோதி தொழிலாளி பலி


கார் மோதி தொழிலாளி பலி
x

விழுப்புரம் அருகே கார் மோதி தொழிலாளி பலி

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள அய்யூர் அகரம்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாவாடை(வயது 50). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று சென்னை புறவழிச்சாலை அய்யூர் அகரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் பாவாடை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story