மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
நாகை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிழந்தனர்.
நாகப்பட்டினம்,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் முகமது ரியாஸ். இவர் காரைக்கால்மேடு பகுதியில் ரேஷன்கடையில் வேலை பார்த்துவந்தார்.
இவரும் இவரது நண்பர் முஹம்மத் இக்பால் பர்னிச்சர் கடைவைத்துள்ளார். இவர்கள் இருவரும் திருநள்ளாரிலிருந்து ஏர்வாடி செல்ல மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை முகம்மதுரியாஸ் ஓட்டி வந்தபோது திருப்பூண்டியை அடுத்த ஈசனூர் அருகே சென்றபோது இவர்களுக்கு பின்னால் வந்த கார் திடீரென முன்னால் சென்ற ரியாஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில்
இந்த விபத்தில் முகமது ரியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகமது இக்பால் பலத்த காயமடைந்தவரை. உடனே அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு சிகச்சையில் இருந்த முகம்மதுஇக்பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்ளனர்.