மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி நண்பர்கள் 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி நண்பர்கள் 2 பேர் பலி
x

வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.

நண்பர்கள்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் மகன் முகமது ரியாஸ்(வயது 40). இவர் காரைக்கால்மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் முகமது இக்பால்(50). இவர் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

கார் மோதியது

நேற்று மாலை இவர்கள் திருநள்ளாரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமது ரியாஸ் ஓட்டிச் சென்றார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே உள்ள ஈசனூர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேரும் பலி

இதில் படுகாயம் அடைந்த முகமது ரியாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் முகமது இக்பால் படுகாயம் அடைந்தார். இதேபோல அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த திருமணங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மீதும் அந்த கார் மோதியதில் அவரும் காயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் பலியான முகமது ரியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயம் அடைந்த முகமது இக்பால் மற்றும் அந்தோணிசாமியை சிகிச்சைக்காகவும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது இக்பால் உயிரிழந்தார். அந்்தோணிசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற காரை தேடி வருகின்றனர்.


Next Story