ஸ்கூட்டர் மீது கார் மோதல்; பெண் துப்புரவு பணியாளர் பலி


ஸ்கூட்டர் மீது கார் மோதல்; பெண் துப்புரவு பணியாளர் பலி
x

ஸ்கூட்டர் மீது கார் மோதல்; பெண் துப்புரவு பணியாளர் பலியானார்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா மாதிரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பாகம்பிரியாள் (வயது 32). இவர், விராலிமலை ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது ஸ்கூட்டரில் மாதிரி பெட்டி செல்லும் வழியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக பாகம்பிரியாள் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பாகம்பிரியாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாகம்பிரியாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story