கார் மரத்தில் மோதி விபத்து; மோட்டார் வாகன ஆய்வாளர் உயிர் தப்பினார்


கார் மரத்தில் மோதி விபத்து; மோட்டார் வாகன ஆய்வாளர் உயிர் தப்பினார்
x

கார் மரத்தில் மோதி விபத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் உயிர் தப்பினார் .

புதுக்கோட்டை

அறந்தாங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள சசிகுமார் தனது காரில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். முத்துப்பட்டினம் அருகே அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் வந்தபோது, கார் எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சசிகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story