கல்லூரி பஸ் மீது கார் மோதல்; டிரைவர் படுகாயம்
கல்லூரி பஸ் மீது கார் மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
கரூர்
ஈரோடு மாவட்டம் திண்டல் மலைப்பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பஸ் ஒன்று நேற்று மாலை மாணவிகளை அழைத்துக்கொண்டு கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலமலை பிரிவு சாலை அருகே சென்றபோது ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று கல்லூரி பஸ் மீது மோதியது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பலத்த காயம் அடைந்த கார் டிரைவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story