கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; தந்தை-மகன்கள் படுகாயம்


கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; தந்தை-மகன்கள் படுகாயம்
x

கடலாடி அருகே கன்டெய்னர் லாரி-கார் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்கள் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

கடலாடி அருகே கன்டெய்னர் லாரி-கார் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்கள் படுகாயம் அடைந்தனர்.

கன்டெய்னர் லாரி-கார் மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் கிடாம்பாளையம் ஊராட்சி தொப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 58). இவரது மகன்கள் சேதுபதி (28), பூவரசன் (23). இவர்கள் 3 பேரும் காஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு காரில் வந்தனர். காரை சேதுபதி ஓட்டினார்.

கடலாடி அருகே உள்ள சிங்காரவாடி சாலை வளைவில் பால்குளிரூட்டும் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது காரும், செங்கத்தில் இருந்து போளூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

3 பேர் படுகாயம்

இதில் காரின் முன்பக்கம் நொறுங்கி உள்ளே இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த சரவணன், சேதுபதி, பூவரசன் ஆகிய 3 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சந்திரன் என்பவரிடம் கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story