நாய் குறுக்கே வந்ததால் மின்கம்பம் மீது மோதிய கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தந்தை-மகன்...!


நாய் குறுக்கே வந்ததால் மின்கம்பம் மீது மோதிய கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தந்தை-மகன்...!
x

பொள்ளாச்சி அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பம் மீது மோதியது.

நெகமம்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 65), இவரும் இவரது மகனும் நேற்று நெகமம் அருகே கக்கடவில் உள்ள தனது தோட்டத்திற்கு வந்து பணிகளை முடித்துவிட்டு இரவு தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

இவர்கள் கக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக கோவில்பாளையம் சாலையில் வந்து கொண்டு இருக்கும் போது காணியாலாம்பாளையம் பிரிவு அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடி வந்துள்ளது.

இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மின்கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக முறிந்தது கார் மின்கம்பம் மீது ஏறி நின்றது. உடனடியாக மின்சார வாரியம் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விபத்தல் காரின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மயில்சாமிக்கும் அவரது மகனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story