சாலையோர வீடு மீது கார் மோதல்


சாலையோர வீடு மீது கார் மோதல்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே சாலையோர வீடு மீது கார் மோதல்

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே உள்ள வாவறை சந்திப்பில் இருந்து ஆலங்கோடு செல்லும் சாலை நோக்கி ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அது ஒரு வளைவான பகுதியில் ெசன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதில் சுவர் முற்றிலும் சேதமானது. மேலும் கார் டிரைவர் காயமடைந்தார். விபத்து நடந்த போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து காரை மற்றொரு வாகனம் மூலம் மீட்டு எடுத்துச் சென்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story