போலீஸ் நிலையத்தில் கார் டிரைவர்கள் மனு
செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் கார் டிரைவர்கள் மனு கொடுத்தனர்.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் வாடகை கார் டிரைவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது:-
செங்கோட்டை பஸ்நிலையத்தில் கார் டிரைவர்களாக சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நாங்கள் வாடகைக்கு வாகனத்தை ஓட்டி வருகிறோம். ஆனால் பஸ் நிலையம் முன்பு ஆட்டோக்கள் எங்களுக்கு வரக்கூடிய சவாரியை, பஸ் நிலையம் முன்பும், பஸ் நிலையம் உள்ளேயும் சென்று சட்டத்திற்கு புறம்பாக சவாரியை ஏற்றிச் செல்கின்றார்கள். இதுகுறித்து கேட்டால் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதோடு, எங்களுக்கு வரக்கூடிய சவாரியும் வராமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே எங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story