திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 51). விசைத்தறி உரிமையாளர். இவர் நேற்று கியாஸ் என்ஜின் பொருத்திய தனது காரை ஸ்டார்ட் செய்தார். சிறிது தூரம் சென்றபின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர் காரை விட்டு இறங்கி பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் மளமளவென தீ பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் காரின் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story