வாய்க்காலில் விழுந்த விவசாயி, சக்கரத்தில் சிக்கி சாவு
அம்மாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாய்க்காலில் விழுந்த விவசாயி, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அம்மாப்பேட்டை;
அம்மாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாய்க்காலில் விழுந்த விவசாயி, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கோவில் திருவிழா
கும்பகோணம் தாலுகா, விசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபு (வயது 42). விவசாயியான இவர் நேற்று களஞ்சேரி கிராம கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள களஞ்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றாா். இந்நிலையில் கோபு மோட்டார் சைக்கிளில்தனது வீ்ட்டின் அருகே உள்ள மோட்டார் பம்பு செட்டுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் குளித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.அப்போது பின்னால் வந்த கார் கோபு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபு மோட்டார் சைக்கிளில் இருந்து அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்தார். இந்த விபத்தில் நிலை தடுமாறி காரும் வாய்க்காலுக்குள் இறங்கியது.
பரிதாப சாவு
இதில் கார் சக்கரத்துக்கு அடியில் சிக்கிய கோபு தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாப்பேட்டை போலீசார் காரை அப்புறப்படுத்தி கோபுவின் உடலை வாய்க்காலில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.