கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; தம்பதி படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.
தம்பதி படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது58). இவருடைய மனைவி உமாதேவி (54). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கட்டங்குடி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்று கொண்டு இருந்த போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக சங்கரநாராயணன் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இந்த விபத்தில் சங்கரநாராயணன், உமாதேவி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். காரும் நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது.
தொடர் விபத்து
உடனே அங்கிருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் உமாதேவி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாளையம்பட்டியில் இருந்து கட்டங்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.