கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x

தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே கார் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

தஞ்சாவூர்


தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே கார் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

லாரியை முந்தி செல்ல முயன்றார்

தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே ராராமுத்திரகோட்டை புதுதெரு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் மாணிக்கவாசகம் (வயது 30). இவர் தஞ்சை ஞானம் நகர் பகுதியில் உள்ள ஒரு கோழிக்கறி கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வேலையை முடித்து விட்டு இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

வாலிபர் பலி

அப்போது கரூர் மாவட்டம் வல்லக்குளத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (31). திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

மாணிக்கவாசகம் லாரியை முந்தி செல்ல முயற்சித்த போது எதிரே மணிகண்டன் ஓட்டி வந்த கார் மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணிக்கவாசகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் கார் ஓட்டி வந்த மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story