கார் கவிழ்ந்து விபத்து; உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்


கார் கவிழ்ந்து விபத்து; உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து சஜி, திவ்யா உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஊட்டி-கூடலூர் சாலை காமராஜர் சாகர் அணை வளைவு பகுதியில் வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் காரில் இடிபாடுகளுக்குள் சுற்றுலா பயணிகள் சிக்கியதால், அச்சத்தில் அலறினர். அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள், காயமடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

தகவல் அறிந்த புதுமந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சமவெளி பகுதியில் வாகனம் ஓட்டுவது போல், மலைப்பகுதிகளில் ஓட்டக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story