கார் கவிழ்ந்து மூதாட்டி பலி


கார் கவிழ்ந்து மூதாட்டி பலி
x

பள்ளிகொண்டா அருகே கார்கவிழ்ந்து மூதாட்டி பலியானார். 8 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

அணைக்கட்டு

பள்ளிகொண்டா அருகே கார்கவிழ்ந்து மூதாட்டி பலியானார். 8 பேர் காயமடைந்தனர்.

கார் கவிழ்ந்து விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ராஜீவ்காந்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 51), தொழிலதிபர். இவரது மகன்கள் யோகனந்தன், விக்ரம், மருமகள்கள் பவித்ரா, சந்தான லட்சுமி, பேரப்பிள்ளைகள் ஜோதிகா (5), நித்திகா (4), தஷ்கா (1) மற்றும் யோகானந்தன் மாமியார் கற்பகம் (60) ஆகிய 9 பேரும் நேற்று முன்தினம் திருப்பதிக்கு காரில் சென்றனர்.

அங்கு சரிசனம் செய்துவிட்டு நேற்று காலை திருப்பதியில் இருந்து வாணியம்பாடிக்கு புறப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி அருகே விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுகாலை 6 மணிக்கு கார் வந்து கொண்டிருந்து. காரை யோகாநந்தன் ஓட்டி வந்தார். அப்போது கார் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் உருண்டு பாறை, மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மூதாட்டி பலி

இதில் காரில் பயணம் செய்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 8 பேரும் காருக்குள் சிக்கி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் உள்ளவர்கள் சென்று அவர்களை மீட்க முயற்சி செய்தனர்.

தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கியவர்களை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வாகன விபத்து ஏற்படாமல் இருக்க சாலை ஓரங்களில் தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தது.

அதனை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தியதை தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் நடப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வேலூர்- ஆம்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தடுப்புச்சுவர் அமைப்பதாக கூறியதின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story