50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
கோத்தகிரி அருகே 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிர் தப்பினர்.
நீலகிரி
கோத்தகிரி,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம், கல்லூரி மாணவர். இவர் நேற்று முன்தினம் தனது காரில் நண்பர்கள் 4 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, இரவில் சொந்த ஊர் திரும்பினர். காரை விக்ரம் ஓட்டினார். கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை தட்டபள்ளம் அருகே சென்ற போது, குறுகிய வளைவில் காரை திருப்ப முயற்சி செய்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக காரில் சென்ற கல்லூரி மாணவர்கள் விக்ரம் உள்பட 5 பேரும் உயிர் தப்பினர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story